வரும் 6ம் தேதி இலங்கை செல்கிறார் சுஷ்மா

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
வரும் 6ம் தேதி இலங்கை செல்கிறார் சுஷ்மா

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 6ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த 2 நாள் பயணத்தின் போது இலங்கை பிரதமர் ரனில் விக்கமரசிங்கே, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோரை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார். அதேபோல் இலங்கை அதிபர் மைத்தரிபால சிறிசேனவையும் சுஷ்மா சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் தேதி இலங்கை செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக சுஷ்மாவின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது போரினால் பாதிக்கப்பட்ட வடமாகணம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை