அரசு போக்குவரத்து க் கழக தொழிலாளர்களுடனான 12 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2 வது கட்டப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
அரசு போக்குவரத்து க் கழக தொழிலாளர்களுடனான 12 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2 வது கட்டப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து

அரசு போக்குவரத்து‌க் கழக தொழிலாளர்களுடனான 12 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2 வது கட்டப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று நடைபெறுகிறது.

பிற்‌பகல் 12.00 மணி அளவில் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில், 42 தொழிற்சங்களை சார்ந்த பிரதிதிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர். பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள 14 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்கனவே தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், போக்குவரத்து ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

மூலக்கதை