15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு 3 கால்பந்து வீரருக்கும் தலா 38 ஆண்டு சிறை: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு 3 கால்பந்து வீரருக்கும் தலா 38 ஆண்டு சிறை: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்பெயின்: கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் வடக்கு ஸ்பெயினில் உள்ள அராண்டா டி டியூரோ நகரில் ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள் கார்லோஸ் குவாட்ராடோ (24), விக்டர் ரோட்ரிக்ஸ் (22), ரவுல் கால்வோ (19) ஆகியோர் ஒரு பிளாட்டில் தங்கியிருந்தனர். அப்போது, இவர்களது பிளாட் வழியாக சென்ற 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர்.

பின்னர், திடீரென மின் விளக்குகளை அணைத்துவிட்டு, துன்புறுத்தலுக்கிடையே மூவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அந்த சிறுமியை தங்களது பிளாட்டில் இருந்து வௌியேற்றிவிட்டனர்.

இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்து பின்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த ஸ்பானிஷ் நீதிமன்றம் 3 கால்பந்தாட்ட வீரர்களுக்கும் தலா 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 3 வீரர்கள் தாங்கள் அந்த சிறுமிைய பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்ேற நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னதாக சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வீரர்களும், ஸ்பானிஷின் மூன்றாம் பிரிவு அணியான அராண்டினா எஃப்சிக்காக விளையாடிய நிலையில், அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போதைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயினின் சட்டத்தின்படி அவர்கள் விளையாடும் அதிகபட்ச காலம் 20 ஆண்டுகள்தான்.

அதனால், அவர்களின் விளையாட்டு கேரியர் இத்தோடு முடிந்துவிட்டது.

.

மூலக்கதை