போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்

தினகரன்  தினகரன்
போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்

அலகாபாத்: போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில், சமாஜ்வாதி எம்.பி. ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், ராம்பூரின் சுவார் தொகுதியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான் வெற்றிபெற்றார். 25 வயது நிறைவடையாதவர்கள் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியாது. ஆனால் சுவார் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது, அப்துல்லா ஆசம்கானுக்கு 25 வயது நிறைவடையவில்லை என்றும், வயது குறித்த போலியான ஆவணங்களை அவர் தாக்கல் செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அப்துல்லா ஆசம் கான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அப்துல்லா ஆசம் கான்  எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு அப்துல்லா ஆசம் கானின் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மூலக்கதை