குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி கொல்கத்தாவில் அம்பேத்கர் சிலையில் தொடங்கி ரவீந்திரநாத் தாகூர் இல்லம் வரை நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டெல்லி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் மீது நடத்தப்படடட தாக்குதலுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா தலைமையிலான பேரணியை தொடர்ந்து கொல்கத்தாவின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. பேரணியை அடுத்து குடியுரிமை சட்டதிருத்தத்தை கண்டித்து கொல்கத்தாவில் திரிணாமுல் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுராவில் ஒருவாரமாக இப்போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

மூலக்கதை