டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

தினகரன்  தினகரன்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டதற்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குலாம் நபரி ஆசாத்இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், துணைவேந்தர் அனுமதிக்காமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் தில்லி போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசிய அவர், மத்திய அரசுதான் உண்மையான குற்றவாளி. ஒரு சட்டத்தை கொண்டு வருவதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நாடாளுமன்றத்தில் செல்வாக்கற்ற மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டெல்லி , உத்தரப்பிரதேசம் என பெரும்பாலாக அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இச்சட்டத்தை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை, என்றும் கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரிஇவ்விகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாணவர்களைத் தாக்கிய டெல்லி போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாமியா பல்கலைக் கழகத்திற்குள் போலீஸ் நுழைய அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு மாணவர்களை போலீஸ் தாக்கியதாக சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். டி.ராஜாடெல்லி மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். போலீஸ் தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை