ஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019

தினமலர்  தினமலர்
ஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ‘ஆல் ரவுண்டர்’ ஷிவம் துபே அறிமுக வாய்ப்பு பெற்றார். 

திணறல் துவக்கம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. காட்ரெல் ‘வேகத்தில்’ ராகுல் (6) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 4 ரன்களில் போல்டானார். ஜோசப் பந்தில் ரோகித் (36) ஆட்டமிழந்தார். பின், இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தபோது, ஸ்ரேயாஸ் (70) ஆட்டமிழந்தார். போலார்டு பந்தில் ரிஷாப் (71) அவுட்டானார். ஜாதவ் (40) அணிக்கு கைகொடுத்தார். ஜடேஜா (21), ஷிவம் துபே (9) விரைவில் திரும்பினர்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. ஷமி (0), தீபக் சகார் (7) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் காட்ரெல், கீமோ பால், ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 

 

 

 

மூலக்கதை