சச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019

தினமலர்  தினமலர்
சச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019

சென்னை: இந்திய முன்னாள் வீரர் சச்சின் தேடிய ஊழியரின் பெயர் குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 46. சென்னையில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, தனக்கு நடந்த அனுபவம் குறித்து ‘டுவிட்டரில்’ தெரிவித்திருந்தார். அதில்,‘ போட்டிக்காக ஓட்டலில் தங்கியிருந்த போது, ஊழியர் (‘வெயிட்டர்’) ஒருவர், எனது கையில் ‘எல்போ கார்டு’ (முழங்கை கவசம்) அணிந்து பேட்டிங் செய்யும் விதம் குறித்து பேசினார். இதன் வடிவத்தில் மாற்றம் செய்யுமாறு ஆலோசனை தந்தார். இவரை நான் தேடி வருகிறேன். நெட்டிசன்கள் உதவ முடியுமா,’ என, தெரிவித்திருந்தார். 

தற்போது, இந்த ரசிகர் சென்னையின் பெரம்பூரை சேர்ந்த குரு பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. தனியார் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில்,‘ கடந்த 2011ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சச்சின் வந்திருந்தார். அப்போது, ஓட்டலில் இவரிடம் ‘எல்போ கார்டு’ மாற்றம் குறித்து பேசினேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின் சச்சின் பார்க்க நினைப்பது மகிழ்ச்சி. அவரை சந்திப்பது எப்போது என்று அவர்தான் சொல்ல வேண்டும்,’’ என்றார். 

 

 

மூலக்கதை