முதல் எலும்பு மஜ்ஜை கொடையாளர் மாசிலாமணி! தனது வாரிசை காக்க போராடுகிறார்!

தினமலர்  தினமலர்
முதல் எலும்பு மஜ்ஜை கொடையாளர் மாசிலாமணி! தனது வாரிசை காக்க போராடுகிறார்!

பேரூர்:ரத்த தானம் தெரியும்; உடல் உறுப்பு தானம் தெரியும்...இதோ இப்போது ஸ்டெம்செல் தானம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு, ஏராளமானோர் காத்திருப்பதால், ஸ்டெம்செல் தானம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார் மாசிலாமணி.
யார் இந்த மாசிலாமணி?
நாட்டிலேயே உறவு முறை அல்லாதவருக்கு, எலும்பு மஜ்ஜையை தானம் அளித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்தான், இந்த 27 வயதாகும் மாசிலாமணி. கோவை, செம்மேடு காந்திகாலனியை சேர்ந்தவர்.கணவர் கவியரசன், ஆறு வயதான மதிவதனி, மூன்று வயதான நீலவேந்தன் ஆகிய இரு குழந்தைகளுடன், மகிழ்ச்சியாக வசித்து வந்த இவருக்கு, குழந்தை மதிவதனி வாயிலாக சோதனை துவங்கியது.
தாலசீமியா நோய் பாதிப்பு!'
தாலசீமியா' எனும் ரத்த குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதிவதனிக்கு, ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதிலிருந்து மாதம் ஒரு முறை, ரத்தம் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.ஒரு கட்டத்தில், டாக்டர்களின் அறிவுறுத்தல் படி, 'ஸ்டெம்செல்' எனப்படும் தொப்புள் கொடியில் இருந்து, அணுக்களை எடுத்து சிகிச்சை அளிக்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பெற்றோர் மட்டுமின்றி உறவினர்கள் என, எவருடைய குருத்தணுவும் மதிவதனிக்கு பொருந்தவில்லை.இதனால், 'ஸ்டெம்செல்' கொடையாளர்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
'ஸ்டெம்செல்' தானம்இதையடுத்து, 2013ல், 'ஸ்டெம்செல்' அளிப்போரின் விபரங்களை பதிவு செய்யும், 'தாத்ரி' எனப்படும் தனியார் அமைப்பின் உதவியை நாடினர். அங்கு, தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்தனர் தம்பதியர்.பல ஆண்டுகளாகியும், தன் குழந்தைக்கு தானம் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்தவர், மார்ச்சில் டில்லியை சேர்ந்த, மூன்று மாத ஆண் குழந்தைக்கு, தனது எலும்பு மஜ்ஜையை தானமாக கொடுத்து, உயிரை காப்பாற்றினார்.
இதன் வாயிலாக, 'இந்தியாவிலேயே உறவு முறை அல்லாதவருக்கு, எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்த முதல் பெண்', என்ற பெருமையை பெற்றார் மாசிலாமணி.இது குறித்து மாசிலாமணி, ''அந்த குழந்தையையும், என் குழந்தையாகவே நினைத்து காப்பாற்றினேன்.''என் மகளை போன்று, ஏராளமான குழந்தைகள் கொடையாளர்களுக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.
''ரத்த தானம், கண் தானம் போன்று, ஸ்டெம்செல் தானம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கொடையாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.''நாட்டிலேயே முதல் முறையாக, எலும்பு மஜ்ஜை தானம் கொடுத்த பெண் என்கிற பெருமையை விட, ஒரு பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்றியதையே, பெருமையாக நினைக்கிறேன்,'' என்கிறார் முகத்தில் பெருமிதம் பொங்க.என் மகளை போன்று, ஏராளமான குழந்தைகள் கொடையாளர்களுக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். ரத்த தானம், கண் தானம் போன்று, ஸ்டெம்செல் தானம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கொடையாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
மாசிலாமணிஉதவிக்கரம் நீட்டலாமே!மாசிலாமணியின் கணவர் 'வெல்டிங்' பணிக்கு செல்கிறார். ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு சிறு வேலைக்கு சென்று வந்த மாசிலாமணி, மகளுக்காக அந்த வேலையையும் கைவிட்டுள்ளார். மதிவதனிக்கு ரத்தம் மாற்றி வருவதால், மூன்று மாதத்துக்கு ஒரு முறை, சென்னைக்குசிகிச்சைக்காக சென்று வருகிறார். தனது குழந்தையை காப்பாற்ற போராடும் மாசிலாமணிக்கு, உதவ விரும்புவோர், 90036 93443, 90920 40756 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மூலக்கதை