குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ கூட்டணியில் சலசலப்பு: நிதிஷ் கட்சியில் கிஷோர் ராஜினாமா

தினகரன்  தினகரன்
குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ கூட்டணியில் சலசலப்பு: நிதிஷ் கட்சியில் கிஷோர் ராஜினாமா

பாட்னா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் கன பரிஷத் கட்சி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. அதேபோல், மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போதே, அதை எதிர்த்து வாக்களிக்கும்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) துணைத் தலைவரும், தேர்தல் வியூக வல்லுநருமான  பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார். ஆனால், கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான  நிதிஷ் குமார் இதற்கு உடன்படவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்த பிரசாந்த் கிஷோர், கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால், நிதிஷ் குமார் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவது, மக்களின் குடியுரிமையை மதிப்பிழப்பு செய்து விடும் என்று  கிஷோர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மூலக்கதை