காங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது 1000 சதவீதம் சரிதான் என தெரிகிறது: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
காங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது 1000 சதவீதம் சரிதான் என தெரிகிறது: பிரதமர் மோடி பேச்சு

தும்கா:தும்கா: ‘‘குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் காங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது, இந்த சட்டத்தை நிறைவேற்றியது 1000 சதவீதம் சரிதான் என்பது தெரிகிறது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடக்கும் 4ம் கட்ட தேர்தலுக்கான  பிரசாரத்தில் பிரதமர் மோடி நேற்று ஈடுபட்டார். இங்குள்ள தும்காவில் பாஜ ேவட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவைப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர் யார் என அவர்கள் அணிந்திருக்கும் ஆடையின் மூலம் டிவி.யில் அடையாளம் காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்கிரசும். அதன் கூட்டணி கட்சிகளும் வன்முறை தீயை தூண்டுகின்றன. இந்த வன்முறையை வடகிழக்கு மாநில மக்கள் நிராகரித்துள்ளனர்.நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் சரி என காங்கிரசின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் நீண்ட காலமாக செய்து வந்ததை தற்போது காங்கிரஸ் செய்கிறது. லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஏராளமானோர் கூடி, குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். மோடி அரசின் தோல்விகள் என அவர்கள் கோஷமிடுகின்றனர். அயோத்தி தீர்ப்பு வெளியானபோதும், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட போதும், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு லண்டனில் குடியிருக்கும் பாகிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். எந்த இந்தியனாவது தூதரகம் அருகே போராட்டம் நடத்துவாரா? ஏதாவது பிரச்னை என்றால் அவர்கள் தூதரகத்துக்கு சென்று புகார் அளிக்கின்றனர். நாட்டின் கவுரவத்தை கெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின்பு, மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முடிவு, 1000 சதவீதம் சரி என்பதை, எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன. நான் உங்கள் சேவகன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் எங்கள் கட்சி என்ன வளர்ச்சி பணிகள் மேற்கொண்டது என்பதை தெரிவிக்க நான் வந்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தாமல், அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் அரண்மனைகளை கட்டியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை முன்னேற்ற காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவிடமும் எந்த செயல்திட்டமும் இல்லை. இவ்வாறு பேசினார்.

மூலக்கதை