தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது

தினமலர்  தினமலர்
தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது

வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யத்­த­வ­றி­ய­வர்­கள், பெரிய அள­வில் அப­ரா­தம் செலுத்­து­வதை தவிர்க்க, வரும், 31ம் தேதிக்­குள் தாம­த­மான வரித்­தாக்கலை செய்ய வேண்­டும்.

கடந்த, 2017ம் ஆண்டு தாக்­கல் செய்­யப்­பட்ட பொது பட்­ஜெட்­டில், குறித்த காலத்­தில் வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யா­த­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது. இது, 2017நிதி­யாண்­டில் அம­லுக்கு வந்­தது.

கடந்த, 2018 நிதி­யாண்­டுக்­கான வரு­மான வரி கணக்கைதாக்­கல் செய்­வ­தற்­கான
நீட்­டிக்­கப்­பட்ட கெடு, ஆகஸ்ட் 31ம் தேதி முடி­வ­டைந்­தது.இந்த கெடு­வுக்­குள்வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யா­த­வர்­கள், ‘பிலே­டட் ரிடர்ன்’ என குறிப்­பி­டப்­படும் தாம­த­மான வரி கணக்கைதாக்­கல் செய்­ய­லாம்.வரும், 31ம் தேதிக்­குள் தாம­த­மாக வரித்­தாக்­கல் செய்து
முடித்­து­விட்­டால், 5,000 ரூபாய் அப­ரா­தம் செலுத்த வேண்­டும்.


எனி­னும், டிசம்­பர், 31ம் தேதிக்­குள் வரித்­தாக்­கல் செய்­ய­வில்லை எனில், 10 ஆயிரம் ரூபாய் அப­ரா­தம் செலுத்த வேண்­டும்.எனி­னும், ஒரு­வ­ரது மொத்த வரு­மா­னம், வரி செலுத்­து­வ­தற்­கான வரு­மான வரம்­பிற்­குள் இருந்­தால், தாம­த­மாக வரித்­தாக்­கல் செய்­தா­லும் அப­ரா­தம் பொருந்­தாது.இந்த வரம்பு சரா­சரி நபர்­களுக்கு, 2.5 லட்­சம் ரூபாய்.

மூலக்கதை