தோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019

தினமலர்  தினமலர்
தோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019

புதுடில்லி: ‘‘வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் தோனி எப்படியும் இடம் பெறுவார்,’’ என விண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்தார்.

இந்திய அணி ‘சீனியர்’ வீரர் தோனி 38. உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணிக்காக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இடம் பெறுவாரா என சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் ‘ஆல் ரவுண்டர்’ டுவைன் பிராவோ கூறியது:

தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. இதனால் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இடம் பெறுவார் என நினைக்கிறேன். இவரை பொறுத்தவரையில் வெளியில் இருந்து எந்த விஷயங்களும் தன்னை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார். இதையே எங்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். எதற்கும் பயப்படக் கூடாது. திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும என்பார்.

இவ்வாறு டுவைன் பிராவோ கூறினார்.

மூலக்கதை