இந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய பெண்கள் ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் ‘ஏ’ அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ‘ஏ’ அணி மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது.

‘டாஸ்’ வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு ரெட்மைன் 113, பர்ன்ஸ் 107 ரன்கள் விளாசி கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய பெண்கள் ‘ஏ’ அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

கடின இலக்கைத் துரத்திய இந்திய பெண்கள் ‘ஏ’ அணிக்கு பிரியா, ஷபாலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது ஷபாலி (46) அவுட்டானார். பிரியா 112 ரன்கள் குவித்து உதவினார். பின் கேப்டன் வேதா (40), வைத்யா (20) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, இந்திய பெண்கள் ‘ஏ’ அணி 44.1 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. தொடர் 1–1 என சமனில் உள்ளது.

மூலக்கதை