நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்

புதுடெல்லி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்’ என்று, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரத்தத்தில் கடிதம் எழுதி உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த டிச. 16, 2012ல் நடந்த கொடூரமான டெல்லி பேருந்து கூட்டு பாலியல் வழக்கு (நிர்பயா) அதன் இறுதி முடிவை நோக்கி வேகமாக நகர்கிறது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திகார் சிறை தயாராகி வருகிறது. பீகார் பக்ஸர் சிறையில் தூக்கு கயிறை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

டிச. 6ம் தேதி, நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினயின் கருணை மனுவை நிராகரிக்கக் கோரிய டெல்லி அரசாங்கத்தின் பரிந்துரையை, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பியிருக்கிறது.

மற்றொரு குற்றவாளி, அக்‌ஷய், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார், வருகிற 17ம் தேதி விசாரணைக்கு வரும்.

பாதிக்கப்பட்டவரின் தாய், குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரி, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து, வர்த்திகா சிங் கூறுகையில், ‘‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட  வேண்டும்.

மரண தண்டனையை, ஒரு பெண் நிறைவேற்ற முடியும் என்று உலகத்திற்கு ஒரு ெசய்தி அனுப்பும். பெண் நடிகர்கள், பெண் எம்பிக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்.

இந்த தண்டனையை நிறைவேற்ற நான்  விரும்புகிறேன்.

இது சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று  நம்புகிறேன்’’ என்றார்.

.

மூலக்கதை