ரஜினி பிறந்தநாளை கொண்டாடிய கத்தார் ரசிகர்கள்

தினமலர்  தினமலர்
ரஜினி பிறந்தநாளை கொண்டாடிய கத்தார் ரசிகர்கள்

கத்தாரில் ரஜினிகாந்த்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கத்தார் தலைநகர் தோஹாவில், இவ்வருடம் கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தினர் (QRMM) படகில் சென்றபடி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தினர்.


கத்தார் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கார்த்திக், மற்றும் இணை-துணை செயலாளர்கள் குரு, சிவா, பால், முத்து, வெங்கட், செந்தில், சீனிவாசன், உமாசங்கர் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து படகு சவாரி செய்தபடி "ஹேப்பி பர்த்டே தலைவா" என எழுதப்பட்ட பிரம்மாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடுகையில் ரஜினிகாந்தின் பட்டையை கிளப்பும் பாடல்கள் ஒலித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நடைப்பெற்ற இந்த கடல் பயண கொண்டாட்டத்தின் போது பிற படகுகளில் சவாரி செய்தவர்களும் கையசைத்து ஹேப்பி பர்த்டே தலைவா என பெருங்குரலில் வாழ்த்தினர். முன்னதாக, கத்தாரின் Scholasys STEM மாணவர்கள், தலைவரின் சிட்டி ரோபோ மாடலை உருவாக்கி, ஆன்மீகம் மட்டுமின்றி தற்கால தொழிநுட்ப கல்வியிலும் ரஜினியின் தாக்கம் இருக்கும் என அற்புதத்தை பதாகையில் சொல்லி, பிறந்த நாளை பெருமை படுத்தினர்.

மூலக்கதை