கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக ஐஸ்வர்ய லட்சுமி

தினமலர்  தினமலர்
கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக ஐஸ்வர்ய லட்சுமி

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமாகவும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமாகவும் உருவாக இருக்கும் படம் பொன்னியின் செல்வன். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது. ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம், அமிதாப்பச்சன், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியிருந்தார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் சமீபத்தில் ரஜினியின் 168-வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏற்கனவே தான் கொடுத்திருந்த கால்சீட் வீணானதால் தற்போது ரஜினியின் படத்தில் நடிப்பற்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் விலகிவிட்டார் என்றும் ஒரு செய்தி வெளியானது.

இதனைத்தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கவுள்ளாராம். இவர் சமீபத்தில் விஷால் நடித்த ஆக்சன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை