பஹத் பாசில் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்

தினமலர்  தினமலர்
பஹத் பாசில் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்

பஹத் பாசில் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் 'மாலிக்'. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கிவருகிறார். ஏற்கனவே பஹத் பாசில் நடித்த டேக் ஆப் என்கிற படத்தை இயக்கிய இவர், கமலின் விஸ்வரூபம் படத்தின் எடிட்டராகவும் பணியாற்றியவர். மாலிக் இவர் இயக்கிவரும் இரண்டாவது படமாகும். இந்த படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். அதற்காக ஹாலிவுட்டிலிருந்து லீ விட்டேகர் என்கிற ஸ்டன்ட் இயக்குனரை அழைத்து வந்துள்ளார்.

ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்-5, பேர்ல் ஹார்பர், ஜுராசிக் பார்க்-3 உள்ளிட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இவர், ஏற்கனவே பாகுபலி, பத்து எண்றதுக்குள்ள, விஸ்வரூபம் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார். பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் அவரது இயல்பான சண்டைக் காட்சிகளை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தில் சண்டை காட்சிகளை அமைக்க ஒப்புக்கொண்டாராம் லீ விட்டேகர்.

மூலக்கதை