'பொன்னியின் செல்வன்'-ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் ?

தினமலர்  தினமலர்
பொன்னியின் செல்வன்ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் ?

தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் போதே தெலுங்கில் நடித்த 'மகாநடி' படத்தின் மூலம் பெரிய பெயரைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின் ஹிந்திப் படங்களிலும் அவரைத் தேடி வாய்ப்புகள் வந்தன. தற்போது ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிரத்னம் ஆரம்பித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் பற்றிய அறிவிப்பில் கீர்த்தி சுரேஷ் பெயர் இடம் பெறவில்லை.

விசாரித்துப் பார்த்ததில், ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த காரணத்தால் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்'ஐ வேண்டாமென்று மறுத்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

மேலும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து 8 மாதங்களுக்கு வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று கண்டிஷன் உள்ளதாம். அதனாலும், கீர்த்தி சுரேஷ் விலகிவிட்டார் என்கிறார்கள்.

இயக்குனரையும், படத்தையும் விட ஹீரோ தான் முக்கியமாகத் தெரிகிறார் போலிருக்கிறது என கிசுகிசுக்கிறது கோலிவுட்.

மூலக்கதை