ரிஷப் பன்ட் திறமையான வீரர்... இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

தினகரன்  தினகரன்
ரிஷப் பன்ட் திறமையான வீரர்... இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

இளம் வீரர் ரிஷப் பன்ட் அபரிமிதமான திறமை கொண்டவர். வருங்காலத்தில் அவர் ஆட்டத்தின் போக்கை  நிர்ணயிக்கக்கூடிய வீரராக இருப்பார். அதற்காக கடுமையாக உழைக்கிறார். பயிற்சியின்போது சிறப்பாக செயல்படுகிறார். நல்ல வீரராக வருவார் என்று நம்புகிறோம். அதனால் தான் அணியில் தவிர்க்க முடியாத வீரராக தொடர்கிறார். நிறைய போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.  நடுவரிசை வீரர்கள் குறித்து இனி கவலைப்பட தேவையில்லை. உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் சிறப்பான நடுவரிசையை,  அதன் முக்கிய அம்சத்தை கண்டறிந்துள்ளோம்.

மூலக்கதை