நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்!

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்!

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆசனங்களை பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமென்பதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. The post நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை