சேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
சேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு

மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, 5.25 சதவீதம் அதிகரித்து, 1.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சேவைகள் இறக்குமதி பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி, 77 ஆயிரத்து, 106 கோடி ரூபாயாக உள்ளது.சேவைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 1.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சேவைகள் இறக்குமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 71 ஆயிரத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.உலகின் சேவைகள் ஏற்றுமதி துறையில் பெரும்பங்கு வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 55 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கிறது சேவைகள் துறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேவைகள் துறை ஏற்றுமதி, இறக்குமதி குறித்த தரவுகள், 45 நாட்கள் தாமதத்தில் வருவதாகும். இந்த தரவுகள், தோராயமானதாகும். காலாண்டு அறிக்கைகள் வெளியிடும் போது, இவை திருத்தங்களுக்கு ஆட்படலாம்.

மூலக்கதை