இரு கட்டமாக நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் கடைசி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரு கட்டமாக நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் கடைசி

சென்னை: இரண்டு கட்டமாக நடக்கும்  ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள். இதுவரை 1 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு கடந்த 9ம் தேதி தொடங்கியது.

இதன்படி 9ம் தேதி 3,217  பேரும், 10ம் தேதி 1,784 பேரும், 11ம் ேததி 16,654 பேரும், 12ம் தேதி 16, 360 பேரும், 13ம் தேதி 71,763 பேர் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778  இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில் சனிக்கிழமையான இன்று பொது விடுமுறை நாள் இல்லை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன் வேட்பாளர்கள் அனைவரும் இன்றும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாளை ஞாயிற்று கிழமையன்று பொது விடுமுறை நாள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை ) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். வேட்பாளர்கள் அன்றைய தினம் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 19ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம்.

இதற்கிடையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் தேர்தல் பார்வையாளர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் கூட்டம் நடத்தி, தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுது செய்ய வேண்டும் உன்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.

மேலும், நடத்தை விதிகள் முறையாகவும் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பதற்றமான வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தேர்தல் வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென என்று கேட்டுக் கொண்டார்.

.

மூலக்கதை