இந்திய அணி பயிற்சியில் பும்ரா | டிசம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணி பயிற்சியில் பும்ரா | டிசம்பர் 13, 2019

புதுடில்லி: காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பந்துவீசி பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய விதிப்படி, காயத்தில் இருந்து மீண்ட பவுலர்கள், இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி திறமை நிரூபிக்க வேண்டும். சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் துவங்கும் முன், இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பந்து வீசினார்.

இதில் 100 சதவீத உடற்தகுதி பெற்றது உறுதியானதால் தான், தற்போது நடக்கும் விண்டீஸ் தொடரில் சேர்க்கப்பட்டார். இதுபோல, பும்ராவும் இந்திய அணி வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளார். வரும் 18ம் தேதி விசாகப்பட்டனத்தில் இந்தியா, விண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான பயிற்சியில் பும்ரா இணைவார் எனத் தெரிகிறது.

இதில் தேறும் பட்சத்தில் பும்ரா ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவார். பின் நியூசிலாந்து செல்லும் இந்திய ‘ஏ’ அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை