ஏற்றுமதி, இறக்குமதி நவம்பரில் குறைந்தது

தினமலர்  தினமலர்
ஏற்றுமதி, இறக்குமதி நவம்பரில் குறைந்தது

புதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

இதேபோல், நாட்டின் இறக்குமதியும் குறைந்துள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில், 2.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 87ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 1.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல் இறக்குமதி, 3.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு நவம்பரில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி, நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், 18.17 சதவீதம் குறைந்து உள்ளது.இருப்பினும், தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டை விட, 6.59 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை