நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடியது. குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் கடைசி நாளான இன்று ராகுல் காந்தி கூறிய கருத்தால் கடும் அமளி ஏற்பட்டது.கடைசி நாளான இன்று அவை கூடியதில் இருந்தே கடும் அமளி நிலவியது. இதையடுத்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதே போன்று மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் போது மொத்தம் 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்களவையில் 14 மசோதாக்களும், மாநிலங்களவியில் 15 மசோதாக்களும் நிறைவேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை