ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பேட்டி

தினகரன்  தினகரன்
ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பேட்டி

விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் லாட்டரிக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை