வங்கதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து 13 பேர் பலி

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து 13 பேர் பலி

தாகா: வங்கதேச தலைநகர் தாகா புறநகர் பகுதியான கெரனிகஞ்ச்ல் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில்  ஆலையில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர்  தீக்காயம் அடைந்தனர். தீயில் சிக்கி காயம் அடைந்த 21 தொழிலாளர்கள் தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை