38 பேருடன் மாயமான சிலி ராணுவ விமான பாகம் கண்டுபிடிப்பு?

தினகரன்  தினகரன்
38 பேருடன் மாயமான சிலி ராணுவ விமான பாகம் கண்டுபிடிப்பு?

சான்டியாகோ: சிலி நாட்டில் 38 பேருடன் மாயமான ராணுவ விமானத்தின் உடைந்து சிதறிய சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவில் இருந்து 3 ஆயிரம் கிமீ தொலைவில் அமைந்துள்ளது புன்டா ஏரினாஸ் நகரம். இங்கிருந்து கடந்த 9ம் தேதி மாலை 4.53 மணிக்கு சென்ற சிலி ராணுவ விமானம் 38 பேருடன் காணாமல் போனது. பல மணி நேரம் முயன்றும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.  இந்நிலையில், விமானத்தின் உடைந்த எரிபொருள் டேங்கரின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலி விமானப்படை கமாண்டர் எடார்டோ மாஸ்கியூரியா அளித்த பேட்டியில், ‘‘நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து  30 கிமீ தொலைவில் விமானத்தின் உடைந்த எரிபொருள் டேங்கரின் பாகங்கள் கடலில் மிதக்கின்றன. இவை காணாமல் போன விமானத்தின் பாகமா என்பது, ஆய்வு செய்த பிறகே தெரியும்,’’ என்றார்.

மூலக்கதை