மேலும் 12,660 டன் வெங்காயம் இறக்குமதி

தினகரன்  தினகரன்
மேலும் 12,660 டன் வெங்காயம் இறக்குமதி

புதுடெல்லி: தட்டுப்பாட்டை போக்க மேலும் 12,600 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்த மாத இறுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயம் விலை கடும் உச்சத்தில் உள்ளது. சந்தைக்கு வரத்தை அதிகரித்து விலையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசின் எம்எம்டிசி மூலம் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு அவ்வளவாக இல்லை. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவுப்படி, மேலும் 12,660 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய எம்எம்டிசி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது வரும் 27ம் தேதி வந்து சேரும் எனவும், இத்துடன் சேர்த்து மொத்தம் 30,000 டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை