இந்தியா துணிச்சலான பேட்டிங் * கங்குலி பாராட்டு | டிசம்பர் 12, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா துணிச்சலான பேட்டிங் * கங்குலி பாராட்டு | டிசம்பர் 12, 2019

புதுடில்லி: ‘‘விண்டீசிற்கு எதிரான மும்பை போட்டியில் இந்திய அணி வீரர்கள் துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்,’’ என கங்குலி தெரிவித்தார்.

விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி கூறியது:

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்கும், தொடரை இழக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டர். எப்படியும் வெற்றி பெறும் எனத் தெரியும் என்பதால் இந்தியாவின் வெற்றி ஆச்சர்யம் தரவில்லை. 

ஆனால் ‘டுவென்டி–20’ போட்டிகளில் தற்போது நாம் பார்ப்பது போல, இந்திய வீரர்கள் எவ்வித பயமும் இல்லாமல் விளையாடினர். துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். எந்த வீரரும் அணியில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவதில்லை. ஆனால் வெற்றிக்காக விளையாடுகின்றனர். ‘வெல்டன்’ இந்தியா.

இவ்வாறு கங்குலி கூறினார்.

 

மூலக்கதை