ஷபாலி, வேதா சதம் * இந்தியா ‘ஏ’ அணி வெற்றி | டிசம்பர் 12, 2019

தினமலர்  தினமலர்
ஷபாலி, வேதா சதம் * இந்தியா ‘ஏ’ அணி வெற்றி | டிசம்பர் 12, 2019

 பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய பெண்கள் ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷபாலி, வேதா சதம் அடித்து கைகொடுக்க, இந்திய ‘ஏ’ அணி 16 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ‘ஏ’ அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணியின் ஷபாலி வர்மா, 78 பந்தில் 124 ரன்கள் (4 சிக்சர், 19 பவுண்டரி) விளாசினார். வேதா கிருஷ்ணமூர்த்தி 113 ரன்கள் (99 பந்து) எடுத்தார். இந்திய ‘ஏ’ அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பெண்கள் ‘ஏ’ அணிக்கு தகிலி 97, அன்னாபெல் 52 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர். மற்றவர்கள் சீரான இடைவெளியில் கிளம்ப, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 296 ரன்கள் மட்டும் எடுத்தது.

இந்திய பெண்கள் ‘ஏ’ அணி 16 ரன்னில் வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய தேவிகா 4, ஹேமலதா 2 விக்கெட் சாய்த்தனர். தொடரில் இந்தியா ‘ஏ’ 1–0 என முன்னிலை பெற்றது.

 

மூலக்கதை