மழையால் ஆட்டம் பாதிப்பு | டிசம்பர் 12, 2019

தினமலர்  தினமலர்
மழையால் ஆட்டம் பாதிப்பு | டிசம்பர் 12, 2019

ராவல்பிண்டி: பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயா டி சில்வா (38), நிரோஷன் டிக்வெல்லா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் தனஞ்செயா டி சில்வா அரைசதம் கடந்தார். இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின், மீண்டும் போட்டி நடந்தது. ஷஹீன் ஷா அப்ரிதி ‘வேகத்தில்’ டிக்வெல்லா (33) அவுட்டானார்.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்த போது மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. மொத்தம் 18.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டி சில்வா (72), தில்ருவான் பெரேரா (2) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை