உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் 9 மொழிகளில் மொழி பெயர்ப்பு

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் 9 மொழிகளில் மொழி பெயர்ப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று மத்ிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மொழிபெயர்க்க ‘சுப்ரீம் கோர்ட் விதிக் அனுவாத் சாப்ட்வேர்’ (சுவஸ்) கடந்த மாதம் 26ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சியளிக்கப்பட்ட இந்த சுவஸ் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அசாமி, வங்காளம், இந்தி, கனடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இது மேலும் விரிவுபடுத்தப்படும். தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றார்.

மூலக்கதை