கேரளாவில் பரபரப்பு: பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: மூத்த அதிகாரி அதிரடி இடமாற்றம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் பரபரப்பு: பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: மூத்த அதிகாரி அதிரடி இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி  ஒருவர்  வாட்ஸ்-அப்பில் ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவல்களை அனுப்பியது பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது. கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன்  அலுவலகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முக்கிய பொறுப்பில் உள்ளார்.  கடந்த 1992ல் ஐஏஎஸ்  அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர், 25 ஆண்டுகளுக்கும்  மேலாக பல  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இவரது செல்போனில்  இருந்து சில இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய  தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு இளம்  பெண் ஐஏஎஸ் அதிகாரி இது குறித்து தலைமை செயலாளர் டோம்  ஜோசிடம் புகார்  செய்தார். அவர் நடத்திய விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்த  நிலையில் புகார் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்   என்று தலைமை செயலாளர் வலியுறுத்தினார். இதையடுத்து அந்த மூத்த ஐஏஎஸ்  அதிகாரி நேரடியாக  சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அந்த பெண்  அதிகாரி எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதற்கிடையே  இந்த தகவல் முதல்வர் பினராய் விஜயனுக்கு தெரியவந்தது. அவர் அந்த மூத்த  ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் முதல்வர்  அலுவலகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து  மாற்றப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத வேறொரு பொறுப்புக்கு  தூக்கியடிக்கப்பட்டார். விரைவில் இவர் கேரளாவில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதேபோல இந்த  மூத்த ஐஏஎஸ்  அதிகாரி மீது புகார் கூறப்பட்டது. அப்போதும் அவர் முதல்வர்  அலுவலகத்தில்  முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்திலும் முக்கிய  பொறுப்பில்  இருந்து அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். ஆனால் மீண்டும் அதே பொறுப்புக்கு  வந்துவிட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியே இவ்வாறு நடந்து  கொண்டது அதிகாரிகள்  மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நீண்ட விடுப்பில் சென்ற பெண் அதிகாரிகுற்றச்சாட்டிற்கு உள்ளான மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டருகே ஒரு இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி வசித்து வந்தார். மூத்த ஐஏஎஸ் தனது அறையில் பதுங்கி இருந்து பைனாகுலர் மூலம் இளம் ஐஏஎஸ் வீட்டை நோட்டமிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்களும் அனுப்பி வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது தொல்லை பொறுக்க முடியாமல் இளம் ஐஏஎஸ் நீண்ட விடுப்பு எடுத்து சென்றுள்ளார். இதுவரை 5 இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் மூத்த அதிகாரி மீதான புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்ய முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். அமல்படுத்த மாட்டோம் கேரள முதல்வர் அறிவிப்பு :திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் மத அடிப்படையிலான எந்த பிரிவினையையும் அனுமதிக்க முடியாது. எல்லா மதங்களை சேர்ந்தவர்களும், இந்திய குடிமகன் என்ற நிலையில் இந்தியாவில் வாழ்வதற்கான சுதந்திரமும், உரிமையும் உள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் அதற்கு இடமளிக்கிறது. அந்த உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது நாட்டின் கொள்கை. கேரள அரசும் அதே கொள்கையை தான் பின்பற்றுகிறது. இந்தியாவை மத அடிப்படையில் பிரிப்பதுதான் ஆர்எஸ்எஸ்.சின் எண்ணம். அதைத்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு அமல்படுத்த முயல்கிறது. இந்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எந்த காரணம் கொண்டும் இந்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த விட மாட்டோம். இந்த சட்டத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை