இந்திய அரசுமுறை சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்தார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன்!

தினகரன்  தினகரன்
இந்திய அரசுமுறை சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்தார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன்!

டாக்கா: இந்திய அரசுமுறை சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்தார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் திடீரென ரத்து செய்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, 9 மணி நேர விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. ஆனால், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், தனது இரண்டு நாள் இந்திய அரசுமுறை சுற்றுப்பயணத்தை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் திடீரென ரத்து செய்துள்ளார். அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 12ம் தேதியான இன்று அவர், இந்தியாவுக்கு வரவேண்டும் என்பது பயணத் திட்டமாக இருந்தது. மாலை 5.20க்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் சில மாதங்கள் இருந்து பார்த்தால், எங்கள் நாடு மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார் என அப்துல மோமன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை