அமெரிக்காவில் 9,811 இந்தியர்கள் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் 9,811 இந்தியர்கள் கைது

அமெரிக்கா: அமெரிக்காவில் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி 9,811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,  2015ம் ஆண்டில் 3,532 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே  9,811 ஆக  அதிகரித்துள்ளது.

மேலும், 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை