குஜராத் மாநிலம் அருகே கிராமமக்களை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை

தினகரன்  தினகரன்
குஜராத் மாநிலம் அருகே கிராமமக்களை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை

அமரேலி: 15-க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுகொன்ற உள்ளனர். குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கிய சிறுத்தையை நேற்று இரவு வனத்துறையினர் சுட்டுகொன்ற பிடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை வந்துள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட கிராம மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அமரேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவம் அருகே யூகலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கியிருந்ததை கிராமமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு இருள்சூழ்ந்ததால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.மேலும் அந்த பகுதியில் நடமாடிய  சிறுத்தைகள் சிலவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை