ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளம் அருகே குண்டு வெடிப்பு

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளம் அருகே குண்டு வெடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் பக்ராமில்  உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த கொரிய மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இந்த குண்டு வெடித்தது. இதில் மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை.  எனினும், இந்த குண்டுவெடிப்பை தலிபான்கள் நடத்தி யிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது.   குண்டுவெடிப்பை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை