எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு உயரும்? : ஆய்வு செய்கிறது குழு

தினகரன்  தினகரன்
எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு உயரும்? : ஆய்வு செய்கிறது குழு

புதுடெல்லி: எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு உயர்த்தலாம் என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தற்போது ஜிஎஸ்டி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 பிரிவாக உள்ளது. இதில் 5 சதவீத வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் மத்திய, மாநில அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த குழு எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி உயர்த்தலாம் என்ற பரிந்துரையை ஆய்வு செய்து, தனது அறிக்கையை, அடுத்த வாரம் 18ம் தேதி கூட உள்ள ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அப்போது சில பொருட்களுக்கு செஸ் வரி மேலும் உயர்த்துவது, தற்போது 4 பிரிவாக உள்ள ஜிஎஸ்டியை 3 பிரிவாக குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மூலக்கதை