பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஊழியரை கடித்துக் குதறிய வெள்ளைச் சிங்கம்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஊழியரை கடித்துக் குதறிய வெள்ளைச் சிங்கம்

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒருவரை கடித்துக் குதறிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. விலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டை சுத்தம் செய்ய வந்தவரை சிங்கம் சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் அவரை கடித்துக் குதறி உள்ளது. கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னு பிரடிட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணி மற்றும் சிங்கத்தின் கூண்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் கூண்டில் இருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து பிரடிட்டாவின் இடது கையைப் பிடித்து கடித்துக் குதறியது. இதில் பிரடிட்டா வலி தங்க முடியாமல் அலறியுள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார். சிங்கம் கடித்ததில் பிரடிட்டாவிற்கு இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை