ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் | டிசம்பர் 10, 2019

தினமலர்  தினமலர்
ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் | டிசம்பர் 10, 2019

மும்பை: விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் டெஸ்ட் வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். 

இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. முதல் போட்டி வரும் 15ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் விசாகப்பட்டனம் (டிச. 18), கட்டாக்கில் (டிச. 22) நடக்கவுள்ளன. 

இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற துவக்க வீரர் ஷிகர் தவான், இடது முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் அணியில் அசத்தும் துவக்க வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

மூலக்கதை