ரன் அவுட் செய்ய மறுத்த வீரர் | டிசம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
ரன் அவுட் செய்ய மறுத்த வீரர் | டிசம்பர் 11, 2019

பார்ல்: எதிரணி வீரரை ரன் செய்யாமல் விட்டு, கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார் இலங்கையின் உதனா.

தென் ஆப்ரிக்காவில் எஸ்.எஸ்.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் பார்ல் ராக்ஸ், நெல்சன் மண்டேலா பே ஜெயன்ஸ் அணிகள் மோதிய போட்டி பார்ல் நகரில் நடந்தது. முதலில் களமிறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவரில் 168/5 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய மண்டேலா அணிக்கு கடைசி 8 பந்தில் 24 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டன. அப்போது பந்து வீசினார் பார்ல் அணியின் இலங்கை வீரர் உதனா. இதில் மண்டேலா வீரர் குன் அடித்த பந்து, பவுலர் திசையில் இருந்த சக வீரர் மரியாஸ் கையில் தாக்கியது. 

அப்போது கிரீசை விட்டு வெளியே இருந்தார் மரியாஸ். பந்து உதனா கையில் சிக்க, ரன் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மரியாஸ், கிரீசிற்குள் வரும் வரை ரன் செய்யாமல் இருந்தார். இவரது செயல் கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் மண்டேலா அணி (156/6) 12 ரன்னில் தோற்றது. 

மூலக்கதை