ரஷித் கான் நீக்கம் | டிசம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
ரஷித் கான் நீக்கம் | டிசம்பர் 11, 2019

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தவர் அஸ்கர் ஆப்கன் 32. சமீபத்திய உலக கோப்பை தொடருக்கு முன், திடீரென இவர் நீக்கப்பட்டு குல்பதீன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் பிடித்தது.

இதனையடுத்து சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மூன்றுவித அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இந்திய மண்ணில் நடந்த விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் (0–1), ஒரு நாள் (0–3) தொடர்களை ஆப்கானிஸ்தான் இழந்தது. தற்போது ரஷித் கான் நீக்கப்பட்டு மூன்று விதமான அணிக்கும் மீண்டும் அஸ்கர் ஆப்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

மூலக்கதை