உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாய்: வேட்பாளர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாய்: வேட்பாளர்கள் இன்ப அதிர்ச்சி

திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் பல ஆயிரம் ரூபாயில் விருப்பமனு வழங்கிய நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாயில் வழங்கப்பட்டதால் மனு வாங்க வந்தோர் சில்லரை காசுகளை தேடினர். தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று தெரியாத நிலையில் நேற்று முன்தினம் முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்துவதால் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்புமனு விண்ணப்பங்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் ஆர்வமுடன் பெற்று செல்கின்றனர்.

வேட்புமனு விண்ணப்பம் கட்டணமாக ஒரு ரூபாய் வாங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்கள், வேட்பு மனு விண்ணப்பத்துக்கு ஒரு ரூபாய் கட்டணத்தை தேர்தல் அலுவலர்கள் கேட்டபோது அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு ரூபாய் நாணயம் கிடைக்காமல் தவித்தனர். பின்னர் உடன் வந்தவர்களிடம் பெற்று அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சியினரிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விருப்பமனு பெற்ற நிலையில், மனு விண்ணப்பம் ஒரு ரூபாய்க்கு கொடுத்தது போட்டியிட விரும்பும் கட்சியினரிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை