நியூசி., தொடரில் பிரித்வி | டிசம்பர் 10, 2019

தினமலர்  தினமலர்
நியூசி., தொடரில் பிரித்வி | டிசம்பர் 10, 2019

 மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் பிரித்வி ஷா 20. விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக (2018) கலக்கினார். ஆஸ்திரேலிய தொடரில் இவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட நாடு திரும்பினார். பின் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, 6 மாத தடையை சந்தித்தார்.

இதில் இருந்து மீண்ட பிருத்வி, சையது முஷ்தாக் அலி டிராபி தொடரில் ரன் மழை பொழிந்தார்.  வரும் 2020, ஜனவரியில் நியூசிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது துவக்க வீரராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ‘ஏ’ அணி, தலா நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அணியில் டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ புஜாரா, ரகானேயுடன் மயங்க் அகர்வால், பிரித்வியும் இடம் பெறுவர் எனத் தெரிகிறது.

மூலக்கதை