அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு: 6 பேர் உயிரிழப்பு, மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக் கொலை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு: 6 பேர் உயிரிழப்பு, மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்களில் 3 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். மேலும், 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் உடனடியாக கிடைக்கவில்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். சூப்பர் மார்க்கெட் உள்ள நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து,  ஜெர்சி நகரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பல்பொருள் அங்காடிக்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த  கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, உள்ளூர் நிர்வாகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது. இதே போல் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூலக்கதை