குடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்

தினகரன்  தினகரன்
குடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு பணிக்காக சென்ற 226வது பட்டாலியனை சேர்ந்த தீபேந்தர் யாதவ் குடிபோதையில் சுட்டதில் உதவி கமாண்டர் சாகுல் ஹர்ஷன் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த துணை உதவி ஆய்வாளர் பூரானந்த் புயன், காவலர் யாதவ் ராஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டிற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மூலக்கதை