வீரர்களின் போதை ஆய்வு அறிக்கையில் மோசடி 2022 உலக கால்பந்தில் ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை...‘வாடா’ நடவடிக்கையால் பெரும் பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீரர்களின் போதை ஆய்வு அறிக்கையில் மோசடி 2022 உலக கால்பந்தில் ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை...‘வாடா’ நடவடிக்கையால் பெரும் பின்னடைவு

லொசேன் நகர்: கோடை, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டி கட்டாரில் நடக்கிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில், ரஷ்ய நாட்டின் தேசிய அணி பங்கேற்க  முடியாது என்று, உலக ஊக்கமருந்து  எதிர்ப்பு நிறுவனம் (வாடா) நிர்வாக குழு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து,  வாடா தலைவர் கிரேக் ரீடி, சுவிஸ் நகரமான லொசேன் நகரில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் கூறியதாவது:  போதைப்பொருள் பயன்படுத்தும் வீரர்களை அடையாளம் காண உதவக்கூடிய ஆய்வக தரவுகளில், ரஷ்ய அதிகாரிகள் போலி ஆதாரங்களை சமர்பித்துள்ளனர். நேர்மறை ஊக்கமருந்து சோதனைகளுடன் இணைக்கப்பட்ட கோப்புகளை  நீக்கிவிட்டனர்.

பல விளையாட்டுகளில் பாரம்பரியமாக ஒரு அதிகார மையமாக இருந்த ரஷ்யாவின் இந்த மோசடி, அந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, ரஷ்ய தேசிய அணியானது கட்டாரில் 2022ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாது.

நடுநிலையாளர்களாக மட்டுமே பங்கேற்க முடியும். உலகக் கோப்பையில் நடுநிலையாளர்களாக போட்டியிடுவது  நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த முடிவின் அளவை தெளிவுபடுத்த ‘வாடா’வுடன் கால்பந்தின் உலக குழுவான ஃபிஃபா தெரிவித்துள்ளது. இந்த தடையால், ரஷ்ய விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.

நான்கு ஆண்டுகள் இந்த தடை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



கடந்த 2018ம் ஆண்டு பியோங்சாங் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், ரஷ்ய அதிகாரிகள் உண்மையை மறைத்ததால், அது ‘வாடா’ குழுவால் கண்டறியப்பட்டது. தற்போதைய தடையால், ரஷ்ய  கால்பந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் சட்டமன்ற உறுப்பினரும் துணைப் பேச்சாளருமான இகோர் லெபடேவ் கூறுைகயில், ‘‘வாடா-வின் நடவடிக்கை ரஷ்ய  விளையாட்டுக்கு கடுமையான அடியாகும், இதற்கு ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து பதில் தேவை’’ என்றார்.

.

மூலக்கதை