குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

ஓசூர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓசூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை எரிக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மசோதா நகலை எரிக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக குடியுரிமை மசோதா உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மூலக்கதை